என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஆர்சிபி-க்கு அதிர்ச்சி: நட்சத்திர தொடக்க வீரர் விலகல்
- ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
- ஆர்சிபி அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிளே ஆப் சுற்றை தவறவிடுகிறார்.
இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்தில் இருக்கும் நிலையில் இவரது விலகல் ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக இருக்கும். இவர் நடப்பு தொடரில் 9 போட்டிகள் விளையாடி 239 ரன்கள் குவித்துள்ளார்.
சமீபத்தில், இளம் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெதெலுக்குப் பதிலாக நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட்டை ஆர்சிபி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.






