search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coaches salaries"

    இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெவ்வேறு அணியின் பயிற்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL

    புதுடெல்லி:

    11-வது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 27-ம் தேதியுடன் நிறைவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது, 4-வது இடம் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்கு தலா ரூ. 8.75 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. 

    அதிக ரன், அதிக சிக்ஸர், அதிக விக்கெட், சிறந்த கேட்ச், சிறந்த அணி, வளர்ந்து வரும் சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி அதற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 

    கோப்பை வென்ற சென்னை அணிக்கு வழங்கப்பட்ட ரூ. 20 கோடி பரிசுத்தொகையில் 10 கோடி ரூபாய் அணி நிவாகத்துக்கும், 10 கோடி ரூபாய் வீரர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. 

    ஐபிஎல் ஏலம் முடிந்த உடனே வீரர்கள் பெரும் பரிசுத்தொகை தெரியவந்துவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு அணிக்கும் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர், ஆலோசகர் என நியமித்துள்ளனர். அவர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 



    அதன்படி பயிற்சியாளர்கள் பெறும் தொகையை இங்கு பார்ப்போம். 

    டேனியல் வெட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர்) - ரூ. 4 கோடி
    ஆஷிஸ் நெஹ்ரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர்) - ரூ. 4 கோடி
    ரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 3.7 கோடி
    ஸ்டீபன் பிளெம்மிங் (சென்னை தலைமை பயிற்சியாளர்) - ரூ. 3.2 கோடி
    விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்) - ரூ. 3 கோடி
    ஷேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.7 கோடி
    ஜாக்கஸ் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.25 கோடி 
    மஹிலா ஜெயவர்தனே (மும்பை அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.25 கோடி
    விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்) - ரூ. 2 கோடி
    கேரி கிரிஸ்டன் (பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர்) - ரூ. 1.5 கோடி
    லசித் மலிங்கா (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர்) - ரூ. 1.5 கோடி
    ×