என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக RCB அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்
- ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
- நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து குவாலிபியர் 1 போட்டியில் பெங்களூரு அணி விளையாடும்.
லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில், லுங்கி இங்கிடிக்கு பதிலாக, ஆர்சிபி அணியில் ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முசராபானி. இணைந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாப்பிரிக்க அணியுடன் லுங்கி இங்கிடி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






