search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mathews"

    • இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கொழும்பு,

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    • மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயார் ஆகவில்லை டைம்அவுட் முறையில் அவுட்.
    • ஷாகிப் அல் ஹசன் திரும்பப் பெற மறுப்பு தெரிவித்ததால், மேத்யூஸ் கடும் விமர்சனம்.

    உலகக் கோப்பை தொடரில் வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 6-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய வரும்போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராகவில்லை என நடுவர் "டைம்அவுட்" முறையில் அவுட் கொடுத்தார். இதனால் பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முறையீடு செய்ததால் நடுவர் அவுட் கொடுத்தார். மேத்யூஸ் ஷாகிப் அல் ஹசனிடம் சென்று முடிவை திரும்பப் பெறுமாறு கேட்டார். ஆனால், ஷாகிப் அல் ஹசன் மறுத்துவிட்டார். இதனால் வங்காளதேச அணியின் செயல் அவமானகரமானது என மேத்யூஸ் விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும் என மேத்யூஸ் சகோதரர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேத்யூஸ் சகோதரர் டிரெவிஸ் கூறுகையில் "வங்காளதேச அணியின் சீனியர் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனுக்கு இலங்கையில் வரவேற்பு கொடுக்கப்பட மாட்டாது. விளையாடுவதற்காக இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும்.

    நாங்கள் இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில், விளையாட்டு வீரர்களுக்கான ஸ்பிரிட் அவரிடம் இல்லை. மேலும், மனிதாபிமானத்தை அவர் காட்டவில்லை. அவர் மற்றும் அவர் அணியிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் சர்வதேச போட்டி அல்லது டி20 லீக் (லங்கா பிரிமீயர் லீக்) போட்டிகளில் விளையாட வந்தால், அவர் மீது கல்வீசப்படும். இல்லாவிடில், ரசிகர்கள் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.

    • ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்.
    • நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் தோற்கடித்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.

    இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிகாட்டி டைம் அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.

    வங்காளதேச அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

    ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் வங்காளதேச அணியின் செயல் வெளிப்படையாக அவமானகரமானது. பீல்டிங்குக்கு இடையூறு அல்லது பந்து வீசுவதற்கு முன்பே கிரீசைவிட்டு நான் வெளியேறி இருந்து அவுட் கொடுத்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இரண்டு நிமிடங்களில் களத்தில் இருந்தேன். நான் கிரீசில் இருந்தபோதுதான் எனது ஹெல்மெட் உடைந்தது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன.

    நான் ஹெல்மெட்டை காட்டிய பிறகு வங்காளதேச அணியினர் மேல்முறையீடு செய்ததாக நடுவர்கள் கூறினார்கள்.

    எனது இரண்டு நிமிடங்கள் முடிவடையாததால், பொது அறிவு எங்கே என்று கேட்டேன். இதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இவ்வளவு கீழ்நிலையில் இருப்பதை பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக ஹெல்மெட்டின் பட்டை உடைந்தது. அந்த சமயத்தில் இதுபோன்று (டைம் அவுட்) வேறு அணியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. எனது உபகரணம் செயலிழந்தது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.

    ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் நான் இரண்டு நிமிடங்களுக்குள் களத்தில் இருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. விக்கெட் வீழ்ந்ததில் இருந்து நான் கிரீசுக்குள் நுழையும் வரையும் எனது ஹெல்மெட் உடைந்த பிறகு இன்னும் 5 வினாடிகள் மீதி இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் நடுவர்கள் மீது இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். 146 ஆண்டு கால சர்வ தேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரர் மேத்யூஸ் ஆவார்.

    இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #England #SriLanka #Whitewash
    கொழும்பு:

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 336 ரன்களும், இலங்கை அணி 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    பின்னர் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்தது. குசல் மென்டிஸ் 15 ரன்னுடனும், சன்டகன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து வீரர்களின் அபாரமான சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. சன்டகன் 7 ரன்னில் ஜாக் லீச் பந்து வீச்சில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ்சுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் தோல்வியை தவிர்க்க போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    அணியின் ஸ்கோர் 184 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய குசல் மென்டிஸ் (86 ரன்கள், 129 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஜாக் லீச்சால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். அடுத்து களம் கண்ட டிக்வெல்லா 19 ரன்னிலும், தில்ருவான் பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரோஷன் சில்வா 65 ரன்னில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக லக்மல் (11 ரன்) வீழ்ந்தார்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 86.4 ஓவர்களில் 284 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஷ்பகுமாரா 42 ரன்னுடன் (40 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சு வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி வீரர்கள் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 1963-ம் ஆண்டுக்கு பிறகு அன்னிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். உள்ளூரில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் இலங்கை அணி தோல்வியை சந்திப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு டெஸ்டில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி இதேபோல் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே நடந்த ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது. #engvssl #testcricket
    கொழும்பு:

    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.



    இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 327 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 274 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட் மட்டுமே உள்ளது. அதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது.  #engvssl #testcricket 
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து உள்ளது. #AsiaCup2018 #Matthews
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியது. இதை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    அவருக்கு பதிலாக சன்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #Matthews
    மேத்யூஸ், டிக்வெல்லா, குசால் மெண்டிஸ் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குசால் பெரேரா 8 ரன்னில் வெளியேறினார்.



    ஆனால் தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். குசால் மெண்டிஸ் 38 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் மேத்யூஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி வரை நின்று மேத்யூஸ் 97 பந்தில் 97 ரன்கள் அடிக்க இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. பின்னர் 300 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்க இருக்கிறது.
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #ENGvIND
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேத்யூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றனர். #WIvSL
    இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 6-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்த மாதம் 30-ந்தேதி மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

    இதற்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் உடற்தகுதி பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.



    இந்நிலையில் ‘‘இந்த வாரயத்தில் அவர்களுக்கு பிட்னெஸ் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது இருவரும் டெஸ்டில் தேர்ச்சி பெற்றார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவார்கள்’’ எ்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இடம்பெறவில்லை.
    ×