என் மலர்

  செய்திகள்

  வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட மேத்யூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றனர்
  X

  வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட மேத்யூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேத்யூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றனர். #WIvSL
  இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 6-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்த மாதம் 30-ந்தேதி மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

  இதற்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் உடற்தகுதி பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.  இந்நிலையில் ‘‘இந்த வாரயத்தில் அவர்களுக்கு பிட்னெஸ் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது இருவரும் டெஸ்டில் தேர்ச்சி பெற்றார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவார்கள்’’ எ்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இடம்பெறவில்லை.
  Next Story
  ×