search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west india vs sri lanka test series"

    இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வருடத்திற்குப் பிறகு டெவன் ஸ்மித் இடம்பிடித்துள்ளார். #WIvSL
    இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 6-ந்தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வருடத்திற்குப் பிறகு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டெவன் ஸ்மித் இடம்பிடித்துள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் பார்படோஸில் பகல்-இரவு டெஸ்டாக நடைபெறுகிறது.



    13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 2. தேவேந்திர பிஷூ, 3. கே பிராத்வைட், 4. ரோஸ்டன் சேஸ், 5. மிகுயெல் கம்மின்ஸ், 6. ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), 7. ஷனோன் கேப்ரியல், 8. ஜமான் ஹாமில்டன் (விக்கெட் கீப்பர்), 9. ஷிம்ரோன் ஹெட்மையர், 10. ஷாய் ஹோப், 11. கீரோன் பொவேல், 12. கெமர் ரோச், 13. டெவன் ஸ்மித்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேத்யூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றனர். #WIvSL
    இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 6-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்த மாதம் 30-ந்தேதி மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

    இதற்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் உடற்தகுதி பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.



    இந்நிலையில் ‘‘இந்த வாரயத்தில் அவர்களுக்கு பிட்னெஸ் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது இருவரும் டெஸ்டில் தேர்ச்சி பெற்றார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவார்கள்’’ எ்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இடம்பெறவில்லை.
    ×