search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvCSK
    ஐபிஎல் 2018 தொடரின் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.



    தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சாஹல் வீசிய பந்தில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார். இந்த ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்.



    ஆட்டத்தின் 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை சர்துல் தாகூர் வீசினார்.



    கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4.2 ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.



    18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.சர்துல் தாகூரின் கடைசி 2 ஓவரில் 37 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×