search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20I"

    • உலகக் கோப்பை அணியில் மாற்று வீரராக இடம் பெற்ற சுப்மன் கில் இந்த தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

    வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கலந்து கொள்ளும் முதல் ஆட்டம் இதுவாகும். உலகக் கோப்பையுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விடைபெற்று விட்டதால், அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. உலகக் கோப்பை அணியில் மாற்று வீரராக இடம் பெற்ற சுப்மன் கில் இந்த தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் 20 ஓவர் அணிக்கு புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை தயார்படுத்தும் செயல்முறை இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடரில் அங்கம் வகித்த ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் 3-வது ஆட்டத்தில் இருந்து அணியினருடன் இணைகின்றனர். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் அதிரடியில் கலக்கிய அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் ஆகியோர் அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைப்பார்கள் என்று தெரிகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ரியான் பராக்கும், பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தரும் வலுசேர்க்கிறார்கள்.

    ஜிம்பாப்வே அணியில் பேட்டிங்கில் ஜோனதன் கேம்ப்பெல், பராஸ் அக்ரமும், பந்து வீச்சில் பிளஸ்சிங் முஜரபானி, பிராண்டன் மவுட்டாவும், ஆல்-ரவுண்டராக கேப்டன் சிகந்தர் ராசா, பிரையன் பென்னெட்டும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.

    இளம் வீரர்களை உள்ளடக்கிய வலுவான இந்திய அணிக்கு, உள்ளூர் சூழல் சாதகத்தை சரியாக பயன்படுத்தி ஜிம்பாப்வே அணி சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 ஆட்டத்தில் இந்தியாவும், 2 ஆட்டத்தில் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரெல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷர் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் ஷர்மா, ஹர்ஷித் ராணா.

    ஜிம்பாப்வே: சிகந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரையன் பென்னெட், ஜோனதன் கேம்ப்பெல், டெண்டாய் சத்தாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கயா, கிளைவ் மடான்டே, வெஸ்லி மெட்விரே, டாடிவான்சே மருமானி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுட்டா, பிளஸ்சிங் முஜரபானி, தியான் மயர்ஸ், ஆண்டம் நக்வி, ரிச்சர்ட் கவரா, மில்டன் சவும்பா.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அந்நாட்டின் அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் விளையாடுகின்றனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 20 ஓவர் போட்டியில் பும்ரா 50 விக்கெட்டை எடுத்துள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோற்றாலும் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2-வது விக்கெட்டான பீட்டர் ஹேண்ட்ஸ் கோயை அவுட் செய்த போது 50-வது விக்கெட்டை தொட்டார். 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை எடுத்த 2-வது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

    அஸ்வின் 47 போட்டியில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் எடுத்துள்ளார். இந்த தொடரில் அவர் அஸ்வினை முந்தி முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச அளவில் அப்ரிடி 98 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 75 விக்கெட் கைப்பற்றி 6-வது இடத்தில் உள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது முறையாக 150க்கும் அதிகமான ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளனர். #RohitSharma #ShikharDhawan #IREvIND #INDvIRE

    அயர்லாந்து சென்று இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - ஷிகர் தவான் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

    இந்த ஜோடி 16 ஓவர்கள் தாக்குபிடித்து விளையாடி 160 ரன்கள் குவித்தது. தவான் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா கடைசி ஓவரில் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது 17-வது அரைசதமாகும். விராட் கோலி 18 அரைசதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.



    சர்வதேச டி20 போட்டிகளில் தவான் - ரோகித் ஜோடி 150க்கும் அதிகமாக ரன்கள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம் இந்த சாதனையை படைத்த முதல் ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர். முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி 158 ரன்கள் குவித்திருந்தது.

    கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் உடன் இணைந்து 165 ரன்கள் எடுத்ததே ஒரு இந்திய கிரிக்கெட் ஜோடி அதிகபட்ச ஸ்கோராகும்.

    இந்திய அணி இதுவரை 13 முறை சர்வதேச டி20 போட்டிகளில் 100 ரன்களுக்கும் அதிகமான பாட்னர்ஷிப் ரன்களை எடுத்துள்ளது. இந்த ஜோடியில் 7 முறை ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #RohitSharma #ShikharDhawan #IREvIND #INDvIRE
    ×