என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தான் சென்று 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா
    X

    பாகிஸ்தான் சென்று 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா

    • போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடைபெற இருக்கிறது.
    • 2022-க்குப் பிறகு ஆஸ்திரேலியா இருதரப்பு தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து மார்ச் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக முன்னணி அணிகள் தயாராகி வருகின்றன.

    ஆசிய கண்டத்திற்கு வெளியில் உள்ள அணிகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் உலகக் கோப்பைக்கு முன் சில டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. உலகக் கோப்பைக்கு இந்த போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகின்றன.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் டி20 அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

    ஜனவரி 29, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக ஆஸ்திரேலியா அணி ஜனவரி 28-ந்தேதி பாகிஸ்தான் செல்கிறது. போட்டிகள் அனைத்தும் பகல்-இரவு ஆட்டமாக லாகூரிலா் நடத்தப்படுகின்றன.

    ஆஸ்திரேலியா கடந்த 2022-ம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானில் இருதரப்பு தொடரில் விளையாட இருக்கிறது. என்றாலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் விளையாடுவதற்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது.

    பாகிஸ்தான் தேர்வாளர்கள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹசன் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆஹாவை சந்தித்து அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வியிடம் ஒப்புதல் பெற்று அடுத்த வாரம் அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×