என் மலர்
நீங்கள் தேடியது "Rachin Ravindra"
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்167 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 56 ரன்கள் அடித்தார்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார்.
64 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்தின் கான்வே 37 ரன்னிலும், வில்லியம்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த டாம் லாதம்-ரச்சின் ரவீந்திரா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லாதம் 145 ரன்னிலும், ரவீந்திரா 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்தது. அந்த அணி இதுவரை 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
- இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா வென்ற 7-வது கோப்பை இதுவாகும்.
இந்நிலையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்தியாவிற்கு என் வாழ்த்துகள். இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி. நியூசிலாந்து அணியில் இடம்பெற்றதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
என ரச்சின் கூறினார்.
4 போட்டிகளில் விளையாடிய ரச்சின், 263 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 282 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 283 ரன்கள் எடுத்து வென்றது.
அகமதாபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட்
77 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.
இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது பெற்றோர் பிறந்த ஊர் பெங்களூர். உண்மையில் அங்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட இருக்கிறேன். இந்தப் போட்டியில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
பெங்களூர் என்றால் எனது குடும்பம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் நான் பெங்களூரில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளேன்.
தந்தை ரவி கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால்தான் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நினைவாக எனக்கு ரச்சின் ரவீந்திரா என்ற பெயரை சூட்டினார் என தெரிவித்தார்.
- முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.
- சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சிறிது நேரத்துக்குப் பிறகு அதிரடியாக ஆடியது. ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் அரை சதம் கடந்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
உலக கோப்பை தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 401 ரன்களைக் குவித்தது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சிறிது நேரத்துக்குப் பிறகு அதிரடியாக ஆடியது. ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் அரை சதம் கடந்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். உலக கோப்பை தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். டேரில் மிட்செல் 29 ரன்னும், மார்க் சாப்மென் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மிரட்டினார். அவர் 25 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 401 ரன்களை குவித்துள்ளது.
இதையடுத்து, 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் ரச்சின் ரவீந்திரா.
- அந்த தருணம் சிறுவயது கனவை நிறைவேற்றும் வகையில் இருந்தது.
நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் விதம், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. பரபரப்பான போட்டியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது.
அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரது பாட்டி திருஷ்டி சுற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது பற்றிய எக்ஸ் பதிவில், "இத்தகைய குடும்பத்தில் இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். தாத்தா, பாட்டிகள் தேவதைகளை போன்றவர்கள். அவர்களின் நினைவுகள் மற்றும் ஆசிர்வாதம் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக ரச்சின் ரவீந்திரா இருந்து வருகிறார். கடந்த போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரச்சின் ரவீந்திரா, சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் தனது பெயரை கோஷமிட்ட தருணம் சிறுவயது கனவை நிறைவேற்றும் வகையில் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
- இதில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
இதற்கிடையே, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.
சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
அதேபோல், சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ், வங்காளதேசத்தை சேர்ந்த நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும், சிறந்த வீராங்கனை விருதை வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூசும் வென்றுள்ளனர்.
- உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார்.
- மொத்தம் 565 ரன்கள் எடுத்துள்ள அவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.
23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.
இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களைக் கலந்து ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் பெயரை கலந்து தமது மகனுக்கு பெயர் சூட்டவில்லை என ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
ரச்சின் பிறந்தபோது என்னுடைய மனைவி தான் இந்தப் பெயரை பரிந்துரைத்தார். அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெயர் நன்றாக, எளிதாக, சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்துதான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.
ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் அவருக்கு இந்தப் பெயரை சூட்டவில்லை என தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
- நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இதேபோல், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
- முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட போகிறேன்
- சென்னை ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பேன்.
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்தஏலத்தில் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஸ்டார்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியது. இதற்கு அடுத்தப்படியாக டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. மேலும் சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரி ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னை ரசிகர்களை நான் மகிழ்விப்பேன் என சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட போகிறேன். சிறந்த வீரர்களான டோனி மற்றும் ஜடேஜா போன்ற சிறந்த வீரர்களை கொண்ட சென்னை அணியில் விளையாடபோவதை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் நியூசிலாந்து வீரர்கள் நிறைய கூறியுள்ளார்கள். சென்னை ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பேன்.
இவ்வாறு ரச்சின் ரவீந்திரா கூறினார்.
- முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
- வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
மவுண்ட் மாங்கனு:
தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை
இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.
- கேன் வில்லியம்சன் 118 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால், ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 340 பந்தில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 4-வது டெஸ்ட் போட்டிதான். 4-வது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 240 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிளிப்ஸ் 39 ரன்களும், டேரில் மிட்செல் 34 ரன்களும், மேட் ஹென்ரி 9 பந்தில் 27 ரன்களும் அடிக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 511 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நீல் பிராண்ட் 6 விக்கெட் சாய்த்தார்.






