என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: 6 ஆண்டுகளுக்கு பிறகு WI அணியில் இடம் பிடித்த வீரர்
    X

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: 6 ஆண்டுகளுக்கு பிறகு WI அணியில் இடம் பிடித்த வீரர்

    • நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 16-ந் தேதி நடக்கிறது.
    • இந்த ஒருநாள் தொடருக்கான ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 வடிவ கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 3-1 (ஒரு ஆட்டம் மழையால் பாதிப்பு) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் இந்த தொடரில் இடம் அளிக்கவில்லை.

    அவருக்கு பதிலாக ஜான் ஜம்பல் இடம் பிடித்துள்ளார். தொடக்க வீரரான இவர் 6 ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:-

    ஷாய் ஹோப் (கேபடன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஜோஹன் லெய்ன், காரி பியர், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

    Next Story
    ×