டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

அதிரடியாக விளையாடிய ஹெட்மையர் 64 ரன்கள் விளாசினார்.வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Published on

டி20 உலகக் கோப்பையில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் கொல்கத்தாவில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணியின் பிரெண்டன் கிங், ஷாங் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரெண்டன் கிங் 30 பந்தில 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 22 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 22 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோவ்மன் பொவேல் 14 பந்தில் 24 ரன்களும், ரூதர்போர்டு 13 பந்தில் 26 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் கர்ரி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com