search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலிய அணி 475 ரன் குவித்து டிக்ளேர்- தென் ஆப்பிரிக்கா திணறல்
    X

    ஆஸ்திரேலிய அணி 475 ரன் குவித்து டிக்ளேர்- தென் ஆப்பிரிக்கா திணறல்

    • தென் ஆப்பிரிக்கா 37 ரன் எடுப்பதற்குள் (18.3 ஓவர்) 3 விக்கெட்டை இழந்தது.
    • உஸ்மான் கவாஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் குவித்து இருந்தது.

    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகி யோர் சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னும், டிரெவிஸ் ஹெட் 70 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கவாஜா 195 ரன்னும், ரென்ஷா 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது.

    ஆஸ்திரேலியா அதே ரன்னில் அதாவது 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்னில் 'டிக்ளேர்' செய்தது. உஸ்மான் கவாஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது.

    தென் ஆப்பிரிக்கா 37 ரன் எடுப்பதற்குள் (18.3 ஓவர்) 3 விக்கெட்டை இழந்தது. கேப்டன் எல்கர் 15 ரன்னில் ஹாசல்வுட் பந்திலும், எர்வீ 18 ரன்னில் லயன் பந்திலும், கிளாசன் 2 ரன்னில் கம்மின்ஸ் பந்தி லும் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டிலும் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×