search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IndiaVsBangladesh"

    • வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
    • இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.

    தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

    அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.

    பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள்.
    • வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம். முதுகுவலியால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் களம் திரும்ப வாய்ப்புள்ளது.

    இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டினர். ஆனால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 5 ஓவர்களில் 29 ரன் விட்டுக்கொடுத்தாரே தவிர விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சிறப்பாக பந்து வீசும் நிலையில், மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் தேவையில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கும்பிளே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் அக்ஷர் பட்டேல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

    மற்றபடி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா என்று இந்தியா வலுவாக திகழ்கிறது. சாதனையின் விளிம்பில் உள்ள ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள். அந்த அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாயகம் திரும்பி விட்டார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அவரை கழற்றி விட்டு தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    கொழும்பு ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் ஷகிப் அல்-ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மமூத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும் 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷர்துல் தாக்குர், ரவீந்திரஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது பும்ரா.

    வங்காளதேசம்: மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன் அல்லது முகமது நைம், லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், அபிப் ஹூசைன், ஷமிம் ஹூசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமூத்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது.
    • 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர், அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 87 ரன்களும், 71 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்னும், ஜாகீர் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 37 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன.

    சுப்மன் கில் 7 ரன்னிலும், புஜாரா 6 ரன்னிலும் , விராட் கோலி ஒரு ரன்னி லும் சுழற்பந்து வீச்சாளர் மெகிதி ஹசன் மிராஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல் 2 ரன்னில் சகீப்-அல்-ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. அக்‌ஷர் படேல் 26 ரன்னும், ஜெய்தேவ் உனட்கட் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 100 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது.

    அதே நேரத்தில் 6 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பந்து வீசியது.

    மெகிதி ஹசன் மிராஸ் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி இந்திய வீரர்களை திணறடித்தார்.

    ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் 13 ரன்னில் சகீப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ரன்னில் வெளியேறினார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன் எடுத்து இருந்தார். அதை தொடர்ந்து அக்‌ஷர் படேலும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இருவரையும் மெகிதி ஹசன் மிராஸ் அவுட் செய்தார்.

    74 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட் களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    8-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-அஸ்வின் ஜோடி ஆடியது. விக்கெட் இழக்காமல் இருக்கும் வகையில் இரு வரும் நிதானமாக ஆட் டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி தொடக்கத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த நிலையில் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசினர். இருவரின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்திய அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அஸ்வின் 62 பந்தில் 42 ரன்னுடனும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யார் 46 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    ×