என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சுடுதல்"

    • உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன.
    • தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்வெண்கலம் வென்றார்.

    கெய்ரோ:

    உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் (26), நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார்.

    போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார்.

    அவர் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    தென் கொரியாவின் பான் ஹியோஜின் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 2-வது இடமும் பிடித்தனர்.

    உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3வது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சும் மோடுகில் (2018), மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.

    • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் பைனல் தோஹாவில் நடைபெறுகிறது.
    • இந்தப் போட்டி டிசம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பைனல் டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பைனல் போட்டிக்கு மானு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர்.

    இவர்கள் மொத்தம் 12 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

    10 மீ ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் மானு பாக்கர் கலந்து கொள்கிறார்.

    ஈஷா சிங், சிப்ட் கவுர் சம்ரா, சிம்ரன்பிரீத் கவுர் பிரார் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 22 பதக்கங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

    ஷிம்கென்ட்:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    கடந்த ஆண்டில் இவர் வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    ஷிம்கென்ட்:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    அவர் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
    • இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.

    ஷிம்கென்ட்:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

    இந்நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 219.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் பெற்ற 10வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.
    • 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வருண் தோமர்- ரிதம் சங்வான் இணை 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

    வருண் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியாவின் ரித்ரான்ஷ் பட்டீல்- நர்மதா நிதின் ராஜூ ஜோடி 16-8 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியாங்கு ஜாங்- ஹனான் யு இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    • தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

    பிருத்வி ராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள்.
    • துப்பாக்கி சுடுதலில் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியது.

    இந்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

    51 வயதான யூசுப், துல்லியமான பார்க்கக்கூடிய கண் கண்ணாடி மற்றும் சத்தம் கேட்காமல் இருக்க கூடிய கருவிகள் எதுவும் அணியாமல் போட்டியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    சாதாரணமான கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்து கொண்டு பல வீரர்களை தோற்கடித்து வெள்ளி பதக்கத்தை அவர் வென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கண்கள் கூசாமல் இருப்பதற்கும் ஒரு கண்ணின் பார்வையை தடுக்கும் விதமாகவும் துல்லியமான சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
    • இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

    மும்பை:

    பிரான்சின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மதியம் நடந்தது.

    இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.

    இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.

    சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    குசாலேவுடன் குடும்பத்திரை போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
    • இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்றனர்.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    ஹங்கேரி வீராங்கனை 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 18-வது இடம்பிடித்தார்.

    ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
    • அதில் ஷூட் ஆப் முறையில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார்.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹங்கேரி வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தனர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் முறையில் ஹங்கேரி வீராங்கனை வென்று வெண்கலம் வென்றார். தென் கொரியா வீராங்கனை தங்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

    இதன்மூலம் மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
    • துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றது

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.

    இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது

    வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

    ×