என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கஜகஸ்தான்
- ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடந்துவருகிறது.
- இதில் இந்திய ஜோடி ஜப்பான் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
அஸ்தானா:
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி ஜோடி, ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ-மியு கிஹாரா ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் ஜோடி 11-4, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது .
- பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் சோயுஸ் எம்எஸ்-25 விண்கலம் தரையிறங்கியது.
- சர்வதேச விண்கெவளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.
நாசா மற்றும் ரஷிய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய 3 பேருடன் சென்ற சோயுஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது.
அதன்படி, பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் சோயுஸ் எம்எஸ்-25 விண்கலம் தரையிறங்கியது. எக்ஸ்பெடிஷன் 71 குழு பூமி திரும்பியதன் மூலம் சர்வதேச விண்கெவளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.
விண்வெளி வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கியதன் மூலம், ரஷ்யாவின் கொனோனென்கோ, நிகோலய் சப் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (374) தங்கியவர்கள் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.
- இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.
கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் வைத்து இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடிப்பெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் தற்போது கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றடைந்துள்ளனர். இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது கடந்த 2001 ஆம் ஆண்டு ரஷியா மற்றும் சீனாவின் முன்முயற்சியால் மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பைக் குறித்து ஆலோசித்து உறுதிசெய்ய ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளும் இந்த ஷாங்காய் கூட்டமைப்பு ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.
இந்த வருட மாநாட்டில் கூட்டமைப்பில் உள்ள மற்றைய நாடுகளின் அதிபர்கள் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் மேற்குலகத்தால் பெருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷியா தனியாக இல்லை என்று அவர்களுக்கு காண்பிக்கும் விதமாக இந்த மாநாட்டை ரஷிய அதிபர் புதின் முன்னெடுத்துச் செல்வார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்த மாநாட்டை மத்திய ஆசியாவில் சீனாவை பிரதானப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது.
- கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
- இந்த துயர சம்பவத்துக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஸ்தானா:
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்குள்ள கோஸ்டென்கோ சுரங்கத்தை ஆர்சிலர் மிட்டல் டெம்ரிடாவ் என்ற தனியார் நிறுவனம் குத்தகை எடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர்.
மீத்தேன் வாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மாயமான 14 பேரை தேடி வருகின்றனர். இதையடுத்து, தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்துக்கு கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
- பிரமிடுகளில் ஸ்டெப் பிரமிடுகள் step pyramids இன்னும் அரிதானவை
- கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் உள்ள அபய் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது.
இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமிடுகளில் "ஸ்டெப் பிரமிடுகள்" (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிடுகள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும்.
மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத்தில், ஸ்டெப் பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4000 வருடங்களுக்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமில்யாவ் யுரேசிய தேசிய பல்கலைக்கழகத்தை (Gumilyov Eurasian National University) சேர்ந்த தொல்பொருள் துறையினர், அபய் மாவட்டத்தில் உள்ள கிரிகுங்கிர் (Kyrykungir) குடியேற்ற பிராந்தியங்களில், 2014 முதல் நடத்தி வரும் அகழ்வாராய்ச்சியில் இதனை கண்டுபிடித்தனர்.
"அறுகோண அடித்தளத்தில் 13 மீட்டர் நீளம் உள்ள இவை 8 வரிசை கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியில் ஒரே மையத்தை கொண்ட பல வட்டவடிவங்களில் கட்டுமானங்கள் உள்ளன. வெளிப்புற சுவர்களில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் பிம்பங்கள் உள்ளன. மிகவும் நுட்பமான கட்டமைப்பு கொண்ட இது, மனித நாகரிகத்தில் கற்காலத்திற்கும் இரும்பு காலத்திற்கும் இடைப்பட்ட வெண்கல காலத்தை (bronze age) சேர்ந்த மக்களின் அற்புதமான தொழில்நுட்ப அறிவுக்கு சான்று" என யுரேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைமை பேராசிரியர் உலன் உமிட்கலியேவ் (Ulan Umitkaliyev) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களும், பட்டதாரிகளும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள அகழ்வாராய்ச்சியில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 14 உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 9-4 என்ற புள்ளி கணக்கில் அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
- நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைபிரிவின் இறுதிஆட்டத்தில் இந்திய இளம் வீரர் அமன் ஷெராவத், கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மன்பெகோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் அமன் ஷெராவத் 9-4 என்ற புள்ளி கணக்கில் அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அரியானாவை சேர்ந்த 19 வயதான அமன் ஷெராவத் கடந்த ஆண்டு நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்கள் தீபக் குக்னா (79 கிலோ), தீபக் நெஹ்ரா (97 கிலோ) ஆகியோர் தங்களது அரைஇறுதியில் தோல்வியை சந்தித்து வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் களம் காணுகின்றனர்.
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது.
- ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமன் கிர்கிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.
அஸ்தானா:
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், கிர்கிஸ்தானின் அல்மாஸ் மன்பெகோவை சந்தித்தார்.
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்றார். இதில் 9-4 என்ற கணக்கில் அல்மாசை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்றுள்ளார்.
- அன்திம் பன்ஹால் தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகார்கி புஜிநமியை சந்திக்கிறார்.
- இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் நான்ஜோவிடம் வீழ்ந்தார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் 8-1 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அக்டென்ஜி கெனிம்ஜாவாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அரியானாவை சேர்ந்த 18 வயதான அன்திம் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்திம் பன்ஹால் தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகார்கி புஜிநமியை சந்திக்கிறார்.
57 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் நான்ஜோவிடம் வீழ்ந்தார். தோல்வி அடைந்த அன்ஷூ மாலிக் அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பங்கேற்கிறார்.
- கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடந்தது.
- வாடிகன் அதிகாரிகள், போப்பாண்டவர் பிரான்சிஸ், சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டனர்.
நூர் சுல்தான்:
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடந்தது.
உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்து கொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றிருந்தார். இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த போது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் சீ ஜின் பிங்கும் சென்றிருந்தார்.
இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள், போப்பாண்டவர் பிரான்சிஸ், சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டனர்.
ஆனால் சீன அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என மறுத்து விட்டனர். இதனை வாடிகன் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போப்பாண்டவர் தன்னை சந்திக்க விரும்பியதை பாராட்டுகிறோம். ஆனால் உரிய நேரம் இல்லாததால் இப்போதைக்கு அவரை சந்திக்க இயலாது என தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.
சீனாவில் கத்தோலிக்க மதத்தின் ஆயர்களை நியமிப்பது குறித்து ஏற்கனவே சீனாவுடன் பேச்சு நடத்த போப்பாண்டவரின் வாடிகன் அலுவலகம் முயற்சி செய்து வந்தது.
இதுப்பற்றி பேசவே போப்பாண்டவர் பிரான்சிஸ், சீன அதிபரை சந்திக்க விரும்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்