என் மலர்
நீங்கள் தேடியது "அர்ஜூன் பாபுதா"
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் அர்ஜுன் பபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி தங்கம் வென்றது.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
இந்த ஜோடி சீன ஜோடியை 17-11 என வென்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
ஏற்கனவே, தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
- கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்நிலையில், இன்று நடந்த கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா-ஆர்யா போர்சே அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த ஜோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீனாவின் ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் அணியை 17-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. சீனா 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பிடித்தது.
- இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடந்தது.
- ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.
நாளை மதியம் 3.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






