என் மலர்
விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்றது இந்திய ஜோடி
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
- கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்நிலையில், இன்று நடந்த கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா-ஆர்யா போர்சே அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த ஜோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீனாவின் ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் அணியை 17-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. சீனா 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பிடித்தது.