என் மலர்
விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றது அர்ஜுன், இளவேனில் வாலறிவன் ஜோடி
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் அர்ஜுன் பபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி தங்கம் வென்றது.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
இந்த ஜோடி சீன ஜோடியை 17-11 என வென்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
ஏற்கனவே, தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






