என் மலர்
டென்னிஸ்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
அல்மாட்டி:
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஹங்கேரியின் பேபியன் மாரோசான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ச் டக்வொர்த் உடன் மோதுகிறார்.
Next Story






