என் மலர்
விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறியது இந்தியா
- டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
- துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றது
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.
இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
Next Story






