என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
    • லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.

    ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

    தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

    Next Story
    ×