என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கேட்ச் பிடிக்கலாம்.. அதுக்குனு இப்படியா.. மிரண்டுபோன பேட்டர்- வைரலாகும் வீடியோ
- நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக விக்டோரியா அணி நிர்ணயித்தது.
- விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷெஃபீல்ட் சீல்ட் (Sheffield Shield 2025-26) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற விக்டோரியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 128 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171/9 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் விளையாடிய சவுத் வேல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில் 117 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் பந்து வீச்சை பேட்டரி பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்வார். அது அவரது பேட்டின் நுணியில் பட்டு சிலிப் திசையில் சென்றது. வேகமாகவும் சற்று விலகியும் வந்த பந்தை ஸ்மித் அசால்ட்டாக பிடித்து அசத்தினார். அவர் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்தாலும் இந்த கேட்ச் மிரட்டலாக இருந்தது.
அவர் கேட்ச் பிடித்ததை பார்த்த பேட்டர் ஷாக் ஆகி கிழே விழுவதுபோல ரியாக்ஷன் கொடுப்பார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






