என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீவன் ஸ்மித்"

    • முக்கியமான தருணங்களில் அற்புதமாக ரன் சேஸ் செய்வார்.
    • அவரின் ரன்களின் எண்ணிக்கை அசரவைக்கும் வகையில் இருக்கும்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு அறிவித்து விட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். டெஸ்டில் 30 சதம், 31 அரைசதம் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் 51 சதமும் 75 அரைசதமும் விளாசியுள்ளார். டி20 போட்டியில் ஒரு சதமும் 38 அரைசதமும் அடித்துள்ளார். மொத்தமாக 82 சதம் விளாசியுள்ளார்.

    ஜாம்பவான் வீரராக வலம் வரும் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு சிறந்த வீரர். முக்கியமான தருணங்களில் அற்புதமாக ரன் சேஸ் செய்வார். அவரின் ரன்களின் எண்ணிக்கை அசரவைக்கும் வகையில் இருக்கும் என ஸ்மித் கூறினார்.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார்.
    • ஸ்மித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிட்னி விரைந்தார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.

    அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.

    இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ம் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ம் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:

    டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
    • கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

    களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.

    பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார். 

    • கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம்.
    • ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

    காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட மூன்று வீரர்கள் பங்கேற்பது கிட்டத்தட்ட சந்தேகத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகும் நிலையில், ஸ்டீவன் ஸமித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருடன் அணியை வழிநடத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம். முதல் டெஸ்ட் (இலங்கை அணிக்கு எதிராக) போட்டியில் ஸ்டீவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்."

    "சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் தனது கரியரில் சிறந்து விளங்கியுள்ளார். அந்த வகையில், இவர்கள் இருவரில் ஒருவர். தற்போதைய சூழ்நிலையில், பேட் கம்மின்ஸ் இடம்பெறுவது கடினம் தான். ஹேசில்வுட் தற்போது நலமுடன் இருக்கிறார். எனினும், அவரின் மருத்துவ அறிக்கையை பொருத்து தான் அவர் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகுவது பற்றிய தகவல்கள் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்று புதிய வீரர்களுடன் விளையாடும் என்று தெரிகிறது. தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்கள் விவரங்களை பிப்ரவரி 12-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

    ×