என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthappa"

    • அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு.
    • இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறையும் சொல்லும்படி இல்லை.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.

    இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் குஜராத் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் கேப்டனே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் உத்தப்பா விளக்கத்துடன் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணியின் உத்தி சிறப்பாக செயல்படுவதை விட அவர்களுக்கே எதிர்வினையாற்றுவதாக இருந்தது. இந்த வருடம் மிடில் ஓவர்களில்தான் பிரசித் கிருஷ்ணா வெற்றிகரமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு. முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை வழங்கினார். எனவே அவருக்கு 2வது ஓவரை வழங்காமல் தவிர்த்திருக்க வேண்டும். அதனையும் கில் செய்யவில்லை.

    அவர்கள் சரியான திசையில் செல்லத் தவறிவிட்டனர். அவருடைய 2 ஓவர்களில் மும்பை முறையே 26, 22 ரன்கள் அடித்தது குஜராத்துக்கு தோல்வியைக் கொடுத்தது. இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறை குஜராத்தை தலை குனிய வைத்தது. இவ்வளவு கேட்சுகளை தவற விட்ட நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்று எதிர்பார்க்க கூடாது.

    என்று உத்தப்பா கூறினார்.

    பிரபல மேக்-அப் மேனும், ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேனுமான முத்தப்பா இன்று காலை காலமானார். #MakeupMan #Muthappa #Rajinikanth
    நடிகர் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா தனது 75வது வயதில் இன்று காலை காலமானார். ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக ஒப்பனை செய்த இவர், கமல்ஹாசனின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ உள்பட பல படங்களில் ஒப்பனையாளராகப் பணியாற்றியவர்.

    ‘ஏவிஎம்’ முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. அப்போதைய முன்னணி இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் சிபாரிசுடன், சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன் செட்டியார் அவர்களால் மேக்-அப் மேனாக வாழ்க்கையைத் துவக்கியவர் முத்தப்பா.

    60 ஆண்டுகளாக ஹீரோ-ஹீரோயின்களுக்கு மேக்-அப் போட்டு ஜொலித்த முத்தப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களிடம் மேக்-அப் மேனாக பணியாற்றியவர்.



    ஒரு கட்டத்தில் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். அத்துடன் ரஜினி நடித்த சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார்.

    இத்தகைய புகழ்பெற்ற மேக்-அப் மேன் முத்தப்பா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலைகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
     நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    ×