என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இப்படி செய்துவிட்டு ஐபிஎல் கோப்பையை எதிர்பார்க்க கூடாது- முன்னாள் சிஎஸ்கே வீரர் விமர்சனம்
- அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு.
- இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறையும் சொல்லும்படி இல்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் குஜராத் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் கேப்டனே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் உத்தப்பா விளக்கத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணியின் உத்தி சிறப்பாக செயல்படுவதை விட அவர்களுக்கே எதிர்வினையாற்றுவதாக இருந்தது. இந்த வருடம் மிடில் ஓவர்களில்தான் பிரசித் கிருஷ்ணா வெற்றிகரமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு. முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை வழங்கினார். எனவே அவருக்கு 2வது ஓவரை வழங்காமல் தவிர்த்திருக்க வேண்டும். அதனையும் கில் செய்யவில்லை.
அவர்கள் சரியான திசையில் செல்லத் தவறிவிட்டனர். அவருடைய 2 ஓவர்களில் மும்பை முறையே 26, 22 ரன்கள் அடித்தது குஜராத்துக்கு தோல்வியைக் கொடுத்தது. இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறை குஜராத்தை தலை குனிய வைத்தது. இவ்வளவு கேட்சுகளை தவற விட்ட நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்று எதிர்பார்க்க கூடாது.
என்று உத்தப்பா கூறினார்.






