என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    வெளியேற்றுதல் ஆட்டம்: குஜராத்-மும்பை அணிகள் நாளை பலப்பரீட்சை
    X

    வெளியேற்றுதல் ஆட்டம்: குஜராத்-மும்பை அணிகள் நாளை பலப்பரீட்சை

    • 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது.
    • தனது நாட்டுக்காக விளையாடுவதால் ஜாஸ் பட்லர் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார்.

    நியூ சண்டிகர்:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆப் சுற்று நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பஞ்சாப் கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன் னேறும்.

    நாளை (30-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடை பெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த குஜராத் டைட் டன்ஸ்-4ம் இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி பஞ்சாப்-பெங்களூரு இடையேயான ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும்.இதில் வெல்லும் அணி 2-வதாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும்.

    குவாலிபையர்-2 ஆட்டத்துக்கு முன்னேறப் போவது குஜராத்தா? மும்பையா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் 36 ரன் வித்தியாசத்திலும், மும்பை வான்கடே மைதானத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது. இதனால் குஜராத் மிகுந்த நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்சை எதிர் கொள் ளும். அதே நேரத்தில் அந்த அணி கடந்த 2 ஆட்டத்தில் லக்னோ, சென்னையிடம் தோற்று இருந்தது.

    மேலும் 538 ரன்கள் குவித்த முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) தனது நாட்டுக்காக விளையாடுவதால் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார். இது குஜராத்துக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த குஷால் மெண்டீஸ் இடம் பெற்றுள்ளார். கேப்டன் சுப்மன் கில் (649 ரன்) , சாய் சுதர்சன்( 679 ) , ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவே தியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் , பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்) சாய்கிஷோர் (17 ), முகமது சிராஜ் (15) ரஷீத்கான் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அந்த அணி குஜராத்தை தோற்கடித்து 'குவாலிபையர்-2' ஆட்டத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    தொடக்கத்தில் தடுமாறிய அந்த அணி பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ரிக்கல்டன், வில்ஜேக்ஸ் ஆடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே. அவர்களுக்கு பதில் பேர்ஸ்டோவ், அசலெங்கா ஒப்பந்தாகி உள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (640 ரன்) கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன்தீர் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), போல்ட் (19 விக்கெட்), தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×