என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dot ball"

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
    • இந்த ஐபிஎல் தொடரில் சிராஜ் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

    இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், அதிக டாட் பந்துகள் வீசிய பந்துவீச்சாளர் விருதை குஜராத் வீரர் முகமது சிராஜ் வென்றார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்படும் என்று பிசிசிஐ புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தான் அதிக மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுப்பு.
    • போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது.

    ஐ.பி.எல்- பிளே ஆப் போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    அதாவது, ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் ரன் எடுக்கப்படாத ஒவ்வொரு பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×