என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் டைட்டனஸ்"
- தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.
- வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட டிரேடிங்காக வாஷிங்டன் சுந்தரின் டிரேடிங் செய்தி அமைந்தது. ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல் அதிகளவு வைரலாகி வருகிறது.
ஆனால் இது குறித்து குஜராத் அணியின் நிர்வாகமும் சரி, சென்னை அணியின் நிர்வாகமும் சரி உறுதியான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி மறுத்துவிட்டது.
- இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.
குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.
- பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் கில் இருந்து வருகிறார்.
- கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக இந்த சீசனில் 8 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் 3 அரைசதம் உட்பட 305 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் களத்தில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.
குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2-ல் வென்றால் கூட குஜராத் அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் கேப்டசியில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் நிதானமாக நேரம் எடுத்து அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்தார். தற்போது சுப்மன் கில்லால் அதிரடியான ஷாட்களை ஆட முடிகிறது. அதேபோல் டாட் பால் சதவிகிதத்தையும் சுப்மன் கில் குறைத்துள்ளார். சுப்மன் கில்லால் எளிதாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய முடிகிறது.
அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சக வீரர்களுடன் அவர் தனது தேவையை சிறப்பாக சொல்வதுதான். அவர் களத்திற்கு வெளியிலும் நல்ல உறவுடன் இருப்பதே குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக திரும்பி இருக்கிறார். இந்த இடம் அவருக்கு ஸ்பெஷலானது.
என்று ரெய்னா கூறினார்.
- 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
- ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸை சந்திக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத்தின் வீறுநடைக்கு ஐதராபாத் முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 169 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய குஜராத் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் லிவிங்ஸ்டன்-சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடியது.
லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சாய் சுதர்சன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 31 பந்தில் அரை சதம் கடந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் குஜராத் பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஆர்சிபி அணி பெற்ற முதல் தோல்வி ஆகும்.
- போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய (மார்ச் 26) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் அணி போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களை குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஷிவம் தூபே அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டேரில் மிட்செல் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில், 207 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
சேசிங்கில் குஜராத் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மிட்செல் பந்து வீச்சை எதிர்கொண்டார் விஜய் சங்கர். இந்த பந்து அவரது பேட்-இல் டிப் ஆகி விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆக மாறியது. கீப்பிங்கில் நின்றிந்த எம்.எஸ். டோனி தன்னை விட பந்து சற்று விலகியே சென்ற போதிலும், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார்.
இந்த சீசன் துவங்கும் முன்பிருந்தே, எம்.எஸ். டோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரோ என்ற பேச்சும், அவரது உடல்நிலை குறித்த சந்தேகமும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது வந்தது. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், எம்.எஸ். டோனியின் நேற்றைய கேட்ச் அமைந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
- ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.
- குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
- ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.






