என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் அணி"

    • 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் காத்திருக்கிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஆட்டமாகும்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்) , ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்) , பஞ்சாப் ( 18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை ( 5 விக்கெட்) வீழ்த்தியது. 8-வது போட்டியில் மும்பையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

    சி.எஸ்.கே. அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகளின் நிலையை பொறுத்துதான் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது.

    நாளைய ஆட்டத்தில் ஐதராபாத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் காத்திருக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஆட்டமாகும். இங்கு முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 3 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. சேப்பாக்கத்தில் சி.எஸ். கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்று அதே நிலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இருக்கிறது.

    2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னையை விட ரன் ரேட்டில் முன்னிலையில் காணப்படுகிறது.

    இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள்.

    • 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுதியுள்ளது.
    • ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதியுள்ளது.

    இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி- 31, ஹென்ரிச் க்ளாசன்- 27, கம்மின்ஸ்- 22, அபிஷேக் ஷர்மா- 18 ரன்களும் எடுத்தனர்.

    குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் சிராஜ்- 4, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    • 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
    • ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.

    இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸை சந்திக்கிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத்தின் வீறுநடைக்கு ஐதராபாத் முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    கொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அனல் பறந்தது. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி (மும்பை) அணியை எதிர்கொள்கிறது. கோழிக்கோடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
    கொல்கத்தா ஆடுகளத்தில் சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும் என கொல்கத்தா அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார். #KKR #KuldeepYadav
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலாவது தகுதி சுற்றில் மும்பையில் விளையாடிய ஐதராபாத் அணியினர் அங்கிருந்து இங்கு வந்து (கொல்கத்தா) இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும். மும்பை ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது.

    ஆனால் கொல்கத்தா ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். இது எங்களது சொந்த ஊர் மைதானம் என்பதால், இங்கு விளையாடுவது எங்களுக்கு சாதகமான ஒன்று. அவர்கள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறார்கள் அல்லது நாங்கள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறுவதே முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.  #IPL2018 #KKR #KuldeepYadav
    ×