

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.
இதுகுறித்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டார்.
அதன்படி, திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்ட்டுள்ளார்.
சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமிக்கப்ட்டுள்ளார்.
சென்னை குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆயுஷ்மான் திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.