search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical courses"

    • தமிழகம் உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
    • மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

    எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதல்கட்ட ஒதுக்கீட்டு ஜூலை 27, 28ம் தேதிகளில் ஆன்லைனில் நடைபெறுகிறது.

    தமிழகம் உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விபரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார்.

    இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/  https://tnmedicalselection.net/  என்ற இணையதளத்தில் ஜூலை 10-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • தேர்வு முடிவுகள் கடந்த 7ந் தேதி இரவு இணையத்தில் வெளியானது.
    • அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் வைஷ்ணவி 320 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

    திருப்பூர் :

    நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ந்தேதி நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 418 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 7ந் தேதி இரவு இணையத்தில் வெளியானது. திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் வைஷ்ணவி 320 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 289 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம், ஜெய்வாபாய் பள்ளி மாணவி காயத்ரி 287 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம், கே.எஸ்.சி., ஆண்கள் பள்ளி மாணவன் அரவிந்த் கார்த்திக் 285 மதிப்பெண்ணுடன் நான்காம் இடம், ஜெய்வாபாய் பள்ளி மாணவி ஸ்வேதா 282 மதிப்பெண் எடுத்து5-ம் இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிளஸ் 2 முடித்து முதல் முறையாக தேர்வை எதிர்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, அழகு என்பவர் இரண்டாம் முறையாக தேர்வு எழுதி 372 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவர் கடந்தாண்டு 190 மதிப்பெண் எடுத்திருந்தார்.

    இது குறித்து நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், திருப்பூரில் 93 மதிப்பெண்ணுக்கு மேல் 128 பேர் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த முறை ஊரடங்கு காரணமாக, படிக்க அவகாசம் கிடைத்தது. 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர்.இந்த முறை 320 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் சேர 128 பேர் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் கட்ஆப் அடிப்படையில் சீட் கிடைக்க வாய்ப்புண்டு என்றார்.

    தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் 6 மருத்துவ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MGRUniversity
    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு 2018-19ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

    பரவு நோயியல் துறையில் மருத்துவம் சார்ந்த 3 பட்ட மேற்படிப்புகளும், நான்கு பிரிவுகளில் முனைவருக்கான ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் சுகாதார மேம்பாடு மற்றும் கல்வி, பொது சுகாதார இதழியியல் ஆகிய இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    பொது சுகாதாரம், பரவு நோயியல், உயிர் புள்ளியல் ஆகிய பிரிவுகளில் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் பொது சுகாதாரம், சமூக மருத்துவம், பரவு நோயியல், உயிர் புள்ளியியல் ஆகிய 4 பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பு சார்ந்த ஆய்வுகளும் வழங்கப்படுகின்றன.

    தகுதிகால அட்டவணை விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தின் (www.tnmgrmn.ac.in) மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தை வந்து சேர அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாளாகும் என்று பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRUniversity
    ×