search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியீடு"

    மத்திய அரசு மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் சார்பில் நடைபெற உள்ள பேஸ்-2 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
    சேலம்:

    இந்திய அரசின் மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) சார்பில் தொழில் நுட்பம் சாராத மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இதன் முதற்கட்ட பேஸ்-1 தேர்வு சமீபத்தில் கம்ப்யூட்டர் வழியாக  நடந்து முடிந்தது.  

     இதற்காக சேலம் சிவதாபுரம்  உள்பட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஏராளமான இளம்பெண்கள், இளை ஞர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக  இந்த தேர்வு நடைபெற்றது. 

    இதனைத் தொடர்ந்து பேஸ்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  விண்ணப்பதாரர்கள்  எடுத்த  மதிப்பெண் அவர்களுடைய பதிவு எண், வரிசை எண்களுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் கட்- அப் மதிப்பெண் எவ்வளவு ? என அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹால்டிக்கெட் வெளியீடு இந்த நிலையில் பேஸ்-1 முதன்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு  பேஸ்-2 முதன்மை தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த இணையதளத்தில் பதிவு எண் அல்லது வரிசை எண் மற்றும் கடவுச் சொல் கொடுத்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை மட்டுமே ஹல்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
    நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு சேலம், நாமக்கல்லில் திரளானோர் எழுதுகின்றனர்.
    சேலம்:

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள், தனியார் இன்ஸ்டிடியூட்டுகள் பல  செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் சேர்ந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 

    இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு தேர்வு நடைபெற உள்ள ேததி அட்டவணைகள் தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ளது. 

    முதலாம் ஆண்டு தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி (திங்கட்கிழமை) முடிவடைகிறது.  2-ம் ஆண்டு தேர்வு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி தொடங்கி  26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. இந்த  தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
    சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை  பட்டதாரி  பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022  அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில்  இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று  தேர்வு நடத்தியது.  

     சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு  தேர்வுகள் நடத்தப்பட்டன.

    பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும்  என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள்,  2955 ஆண்கள் என  8677 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET)  எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர்  பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013,  ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த  மதிப்பெண்கள்  தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து  பார்க்கலாம்.  மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்ச்சி பெற்றவர்கள்  மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில்  முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர   பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×