என் மலர்

  நீங்கள் தேடியது "releases"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட இன்றே, 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
  போபால்:

  மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

  ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.  இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.

  இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். #DonaldTrump #Omarosa
  வாஷிங்டன்:

  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

  இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  அந்த உரையாடல் பதிவு, அவரும் ஜனாதிபதி டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது.  அந்த உரையாடலில் ஜனாதிபதி டிரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.

  அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.

  உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது.

  இது குறித்து டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ அந்தப் பெண், பணியை இழந்த பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கி உள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவரை கேட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

  டிரம்பின் வக்கீல் ரூடி கிலானி கருத்து தெரிவிக்கையில், “வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததின் மூலம் அவர் சட்டத்தை மீறி விட்டார்” என கூறி உள்ளார்.  #DonaldTrump #Omarosa #tamilnews 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. #Pakistan #IndianFishermen #Release
  கராச்சி:

  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

  அவ்வாறு கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. #NorthKorea #SouthKorean
  சியோல்:

  தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

  ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

  அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் கடந்த 22-ந் தேதி சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறப்பட்டு உள்ளது.

  மேலும், வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்த நிலையில் இப்போது சியோவை வடகொரியா விடுதலை செய்து இருப்பதை சாதகமான அறிகுறியாக தென்கொரியா எடுத்துக்கொண்டு உள்ளது.

  கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  ×