என் மலர்

  நீங்கள் தேடியது "detained"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SabarimalaVerdict #SabarimalaIssue
  திருவனந்தபுரம்:

  சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது.

  அப்போது அய்யப்பனை தரிசிப்பதற்காக சென்றிருந்த தடை செய்யப்பட்ட வயது பெண்களை, நிலக்கல், பம்பை, சன்னிதானம் போன்ற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பி சென்றனர்.

  இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தற்போது மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

  இந்த நிலையில் சபரிமலை தந்திரிகளின் தாழமோன் குடும்பத்தை சேர்ந்தவரும், அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை தடுப்பதற்காக சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார். அதாவது, சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயது பெண்கள் யாராவது நுழைந்தால், கோவிலை மூடும் வகையில் அய்யப்ப பக்தர்கள் சிலர் அங்கே ரத்தம் சிந்துவார்கள் என தெரிவித்தார்.  கத்தியால் தங்களை தாங்களே காயப்படுத்தி ரத்தம் சிந்துவதற்கு அய்யப்ப பக்தர்கள் 20 பேர் தயாராக இருப்பதாக கூறிய ராகுல் ஈஸ்வர், இவ்வாறு கோவிலில் ரத்தம் சிந்தப்படுவதால் பரிகார பூஜைகளுக்காக 3 நாட்கள் மூடப்படும் என்றும் தெரிவித்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக ராகுல் ஈஸ்வர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கொச்சியில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். ராகுல் ஈஸ்வருக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் #SabarimalaVerdict #SabarimalaIssue
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest
  திருநெல்வேலி:

  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதம் வசூலிப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கான அபராத கட்டணத்தை பலகலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது.

  இதனை கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, அதனை கட்டுப்படுத்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியாவில் டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை கவர்ந்து, அவர்களை கொலை செய்து, சமைத்து உண்ணும் பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். #Russia #DatingApp
  மாஸ்கோ:

  ரஷியாவில் நடாலியா பக்‌ஷீவா என்ற பெண்ணும், அவரது கணவரான டிமிட்ரி பக்‌ஷீவா என்பவரும் பல ஆண்டுகளாக மனிதர்களை கொலை செய்து, அவர்களை சமைத்து உண்டு வந்துள்ளனர்.

  இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக இருந்த ஹோட்டல் ஊழியரான எலேனா என்ற பெண்ணை தனது கணவரின் மூலமாகவே கொலை செய்ய வைத்துள்ளார் நடாலியா. மனைவியின் வற்புறுத்தலினால் தோழியை கொலை செய்த ட்மிட்ரி, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மனைவியிடம் கொடுக்க அவர் அதனை சமைத்து உண்டுள்ளார்.

  ஹோட்டல் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், நடாலியாவின் வீட்டை சோதனை செய்ததில், மனித மாமிசங்களின் மீதமும், தோல் போன்றவையும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இருந்த மாமிசம், கொலை செய்யப்பட்ட ஹோட்டல் ஊழியருடையது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

  இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், டேட்டிங் ஆப் மூலம் 30 பேர் வரை ஏமாற்றி வரவழைத்து கொன்று தின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  ஏற்கனவே, நடாலியாவின் கணவர் ட்மிட்ரி மீது நிரூபிக்கப்படாத நரமாமிச குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், காசநோய் இருப்பதால் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. #Russia #DatingApp
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குட்கா முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது. #GutkhaScam #CBI
  சென்னை:

  தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

  தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

  பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில், தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்போன் மூலம் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். #BulletNagarajan
  தேனி:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவரை பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவருடைய மற்றொரு ஆடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார்.

  தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரவுடி நாகராஜன், தேனி பெரிய குளம் டி.எஸ்.பி. ஆறுமுகத்தால் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BulletNagarajan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் கலவரத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம் சாட்டி பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாட், 22 ஆண்டுகால பழைய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். #SanjivBhatt
  காந்திநகர்:

  குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் பாட் 1996-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடி முக்கிய உடந்தையாக இருந்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

  தொடர்ந்து பணிக்கு வராத காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பதவியில் இருந்து சஞ்சய் பாட் நீக்கப்பட்டார். இந்நிலையில், 22 ஆண்டுகால பழைய வழக்கில் பாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

  1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பாட் பனஸ்கந்தா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். வழக்கில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, 1996-இல் ஒரு கிலோ அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சஞ்சீவ் பாட் தலைமையிலான பனஸ்கந்தா போலீஸார் சுமர்சிங் ராஜ்புரோஹித் எனும் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். பலன்பூர் நகரில் ராஜ்புரோஹித் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பனஸ்கந்தா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

  இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் போலீஸார், வழக்கறிஞர் ராஜ்புரோஹித் இந்த வழக்கில் தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்று விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்தது. மேலும், ராஜ்புரோஹித் அவரது இல்லத்தில் இருந்து பனஸ்கந்தா போலீஸாரால் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

  இதற்கிடையில், ராஜ்புரோஹித் தொடுத்த வழக்கின் தீர்ப்பாக குஜராத் ஐகோர்ட் இந்த வழக்கை சிஐடி-க்கு மாற்றியும், விசாரணையை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

  இந்த விசாரணையில் சஞ்சீவ் பாட்டுக்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் உட்பட பலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஐடியின் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுடெல்லியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி வாகன ஓட்டுனர் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். #NewDelhi
  புதுடெல்லி:

  இந்தியாவில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசும், பல்வேறு சமூக அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

  இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றங்கள் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாகவே தெரிகிறது.

  இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பளாம் கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை, பள்ளி வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து, வாகன ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. #NewDelhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்ற பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Rohingyas #Hyderabad
  ஐதராபாத்:

  மியான்மர் நாட்டின் உள்நாட்டு போர் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக ரோஹிங்கியா மக்கள் குடியேறினர். அவர்கள் அகதிகளாக மட்டுமே வாழ இயலுமே தவிர எந்த நாட்டிலும் குடிமக்களாக உரிமை பெற முடியாது.

  இந்தியாவில் ஐதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சில அகதிகள் குடியுரிமை போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை அகதிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்நிலையில், ஐதராபாத் நகரில் ஒரு பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வாழும் இருவரது உதவியுடன் இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, போலி ஆவணங்களை பெற உதவியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  அவர்களிடம் இருந்து ஆதார் போன்ற அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். #Rohingyas #Hyderabad
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. #NorthKorea #SouthKorean
  சியோல்:

  தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

  ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

  அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் கடந்த 22-ந் தேதி சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறப்பட்டு உள்ளது.

  மேலும், வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்த நிலையில் இப்போது சியோவை வடகொரியா விடுதலை செய்து இருப்பதை சாதகமான அறிகுறியாக தென்கொரியா எடுத்துக்கொண்டு உள்ளது.

  கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னையில் வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
  சென்னை:

  இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இருந்து பல்வேறு அரிய பொருட்கள் கடல் மார்க்கமாகவும், விமான போக்குவரத்து மூலமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. அதனை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுப்பதற்கும், கடத்தப்பட்டவற்றை பறிமுதல் செய்வதிலும் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் 11.15 கிலோ எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்திய 3 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 535 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்திய இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். #Delhi #CannabisCaptured
  புதுடெல்லி:

  டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

  இந்நிலையில், அதிக அளவிலான கஞ்சா கடத்தப்பட இருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்,  அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 535 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சாவை கடத்தி வந்த 2 நபர்களை  கைது செய்த காவல்துறையினர் அவர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhi #CannabisCaptured
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print