என் மலர்
செய்திகள்

டேட்டிங் ஆப்பினால் வந்த ஆப்பு - 30 பேரை கொன்று தின்ற தம்பதி
ரஷியாவில் டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை கவர்ந்து, அவர்களை கொலை செய்து, சமைத்து உண்ணும் பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். #Russia #DatingApp
மாஸ்கோ:
ரஷியாவில் நடாலியா பக்ஷீவா என்ற பெண்ணும், அவரது கணவரான டிமிட்ரி பக்ஷீவா என்பவரும் பல ஆண்டுகளாக மனிதர்களை கொலை செய்து, அவர்களை சமைத்து உண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக இருந்த ஹோட்டல் ஊழியரான எலேனா என்ற பெண்ணை தனது கணவரின் மூலமாகவே கொலை செய்ய வைத்துள்ளார் நடாலியா. மனைவியின் வற்புறுத்தலினால் தோழியை கொலை செய்த ட்மிட்ரி, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மனைவியிடம் கொடுக்க அவர் அதனை சமைத்து உண்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், நடாலியாவின் வீட்டை சோதனை செய்ததில், மனித மாமிசங்களின் மீதமும், தோல் போன்றவையும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இருந்த மாமிசம், கொலை செய்யப்பட்ட ஹோட்டல் ஊழியருடையது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், டேட்டிங் ஆப் மூலம் 30 பேர் வரை ஏமாற்றி வரவழைத்து கொன்று தின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே, நடாலியாவின் கணவர் ட்மிட்ரி மீது நிரூபிக்கப்படாத நரமாமிச குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், காசநோய் இருப்பதால் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. #Russia #DatingApp

Next Story