search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight attendant"

    • விமானத்தில் சென்ற டோனி கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
    • எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் டோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்த வருடம் மீண்டும் சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி 5-வது கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் விமானத்தில் பணிப்பெண் ஒருவர் எம்எஸ் டோனிக்கு பரிசு ஒன்றை வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நிறைய சாக்லேட் மற்றும் பிஸ்கட் இனிப்பு பண்டங்களை தட்டில் வைத்து டோனியிடம் சென்று நீட்டினார். அந்த சமயத்தில் மிகவும் ஆர்வமாக கேண்டி க்ரஷ் விளையாட்டை டேப்லட் போனில் விளையாடிக் கொண்டிருந்த அவர் அதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

    மேலும் எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர். அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்ட டோனி சில அன்பான வார்த்தைகளை பேசினார். மேலும் இவ்வளவு சாக்லேட்டுகள் எனக்கு எதற்கு இது மட்டும் போதும் என்று ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை அந்த பெண்ணிடமே கொடுத்து விட்டார்.

    டோனி கேண்டி கிரஷ் விளையாடுகிறார் என்று தெரிந்ததும் அந்த வார்த்தையும் விளையாட்டும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 

    டெல்லியில் விமான பணிப்பெண் தனது வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவரின் பெற்றோரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #DelhiHC
    புதுடெல்லி:

    டெல்லியில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் அனிசா பத்ரா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அனிசாவை அவரது கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்தியதாக அனிசாவின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மாயங் சிங்வியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்ற காவலில் வைக்குமாறு தீர்ப்பளித்தது.



    இந்நிலையில், அனிசாவின் தற்கொலை தொடர்பாக எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என மாயங் சிங்வியின் பெற்றோர் சுஷ்மா சிங்வி, ஆர்.எஸ் சிங்வி ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மாயங் சிங்வியின் பெற்றோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் ஜாமீன் கோரியது குறித்து டெல்லி போலீசார் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தனர். #DelhiHC
    டெல்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விமான பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையில் அவரது கணவர் மாயங் சிங்விக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் சமீபத்தில் விமான பணிப்பெண் அனிசா பத்ரா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அவரது கணவர் மாயங் சிங்வி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    தனது மகள் அனிசா பத்ராவை அவரது கணவர் கொடுமை படுத்தியதாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், அனிசா பத்ராவின் பெற்றோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். மேலும், அனிசா சிங்வி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு தான் தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

    இதையடுத்து, நேற்று மாலை, அனிசா பத்ராவின் கணவர் மாயங் சிங்வி போலீசாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாய்ங் சிங்வியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    அனிசா பத்ராவின் பெற்றோர்கள் கடந்த ஜூன் மாதம் தனது மகள் அனிசா பத்ராவை கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்துவதாகவும், அனிசா பத்ராவுக்கு ஏதேனும் நேர்ந்தால் முழு காரணம் மாயங் சிங்வி தான் எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Delhi
    டெல்லியில் விமான பணிப்பெண் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் அனிசியா பத்ரா என்ற பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது பெற்றோர், கணவர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். தனது மகளை கணவர் கொடுமை படுத்தியதாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனிசியாவின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அனிசியாவின் கணவரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு காரணங்களால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம் என அவரது கணவர் மாயங் சிங்வி போலீசாரிடம் தெரிவித்தார்.

    மேலும், தற்கொலை செய்வதற்கு முன்னதாக தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மாயங் சிங்விக்கு அனிசியா குறுந்தகவல் அனுப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விமான பணிப்பெண் அனிசியா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Delhi
    டெல்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவருடன் ஹவுஸ் காஸ் பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாக தெரிகிறது.

    நேற்று முன்தினம் தான் குடியிருக்கும் வீட்டின் மொட்டைமாடிக்கு சென்ற அந்த பெண் திடீரென்று கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhi 
    ×