search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு - கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
    X

    டெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு - கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    டெல்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விமான பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையில் அவரது கணவர் மாயங் சிங்விக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் சமீபத்தில் விமான பணிப்பெண் அனிசா பத்ரா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அவரது கணவர் மாயங் சிங்வி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    தனது மகள் அனிசா பத்ராவை அவரது கணவர் கொடுமை படுத்தியதாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், அனிசா பத்ராவின் பெற்றோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். மேலும், அனிசா சிங்வி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு தான் தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

    இதையடுத்து, நேற்று மாலை, அனிசா பத்ராவின் கணவர் மாயங் சிங்வி போலீசாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாய்ங் சிங்வியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    அனிசா பத்ராவின் பெற்றோர்கள் கடந்த ஜூன் மாதம் தனது மகள் அனிசா பத்ராவை கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்துவதாகவும், அனிசா பத்ராவுக்கு ஏதேனும் நேர்ந்தால் முழு காரணம் மாயங் சிங்வி தான் எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Delhi
    Next Story
    ×