search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rohingya refugees"

    • மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர்.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வங்காளதேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பித்து ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா மற்றும் இந்தோனேசியாவை அடைய முயற்சிக்கின்றனர்.

    அந்த வகையில், மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர். இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இதுவரை 17 சடலங்களை மீட்டுள்ளதாகவும், எட்டு பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர்
    • பசி, பட்டினியால் தவித்த அதிகளை சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

    பண்டா ஆச்சே:

    புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். பாலியல் பலாத்காரம், கொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் வீடுகளை எரித்ததாக மியான்மர் ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

    இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ள நிலையில், சமீபத்தில் 117 ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். மியான்மரில் இருந்து படகு மூலம் ஒரு ஒரு மாத காலமாக ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அவர்கள், மலேசியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆச்சே கடற்பகுதியில் சிக்கித் தவித்த அவர்கள், மெவுனசா பாரோ கிராமத்தில் கரையேறி உள்ளனர்.

    பசி, பட்டினியால் தவித்த அவர்களை கடலோர கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். அகதிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    இதேபோல் கடந்த மார்ச் மாதம் 114 ரோஹிங்கியா அகதிகள், ஆச்சே மாகாணம் பைலயின் மாவட்ட கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்ற பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Rohingyas #Hyderabad
    ஐதராபாத்:

    மியான்மர் நாட்டின் உள்நாட்டு போர் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக ரோஹிங்கியா மக்கள் குடியேறினர். அவர்கள் அகதிகளாக மட்டுமே வாழ இயலுமே தவிர எந்த நாட்டிலும் குடிமக்களாக உரிமை பெற முடியாது.

    இந்தியாவில் ஐதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சில அகதிகள் குடியுரிமை போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை அகதிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், ஐதராபாத் நகரில் ஒரு பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வாழும் இருவரது உதவியுடன் இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, போலி ஆவணங்களை பெற உதவியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவர்களிடம் இருந்து ஆதார் போன்ற அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். #Rohingyas #Hyderabad
    மியான்மரிலிருந்து வங்காள தேசத்துக்கு குடியேறி உள்ள ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசு தொடங்கி உள்ளது. #Rohingyarefugees
    டாக்கா:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர்.

    வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள  7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா இன மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. வின் அகதிகள் உயர்மட்டக் குழுவுடன் இணைந்து வங்காளதேச அரசு இந்த வாரம் தொடங்கியுள்ளது. இது வங்காளதேச முகாம்களில் உள்ள அகதிகளின் தகவல்களை சேகரித்து வைப்பதற்காக இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் நவம்பர் மாதத்துக்குள் பதிவு செய்து முடிக்கப்படும். இந்த தகவல்களில், அகதிகளின் குடும்பம், பிறப்பு குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். இது நாடு திரும்புவதற்கு உதவியாக இருக்கும். இதற்காக அகதிகளின் கைரேகை, கண் விழிகள் மற்றும் மற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தகவல்கள் கொடுத்த அகதிகளுக்கு ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசின் லோகோ அடங்கிய அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இவை அகதிகளை பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். #Rohingyarefugees 
    ×