search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. தொடங்கியது
    X

    வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. தொடங்கியது

    மியான்மரிலிருந்து வங்காள தேசத்துக்கு குடியேறி உள்ள ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசு தொடங்கி உள்ளது. #Rohingyarefugees
    டாக்கா:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர்.

    வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள  7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா இன மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. வின் அகதிகள் உயர்மட்டக் குழுவுடன் இணைந்து வங்காளதேச அரசு இந்த வாரம் தொடங்கியுள்ளது. இது வங்காளதேச முகாம்களில் உள்ள அகதிகளின் தகவல்களை சேகரித்து வைப்பதற்காக இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் நவம்பர் மாதத்துக்குள் பதிவு செய்து முடிக்கப்படும். இந்த தகவல்களில், அகதிகளின் குடும்பம், பிறப்பு குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். இது நாடு திரும்புவதற்கு உதவியாக இருக்கும். இதற்காக அகதிகளின் கைரேகை, கண் விழிகள் மற்றும் மற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தகவல்கள் கொடுத்த அகதிகளுக்கு ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசின் லோகோ அடங்கிய அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இவை அகதிகளை பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். #Rohingyarefugees 
    Next Story
    ×