search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DRI"

    சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினரின் அதிரடி சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChennaiAirport #GoldSmuggling #DRI
    சென்னை:

    பண்டிகை காலங்களில் தங்கத்துக்கான மதிப்பு அதிகரிப்பதை மையமாக கொண்டு தங்க கடத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி, இன்று சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் கடத்தல் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.



    இதையடுத்து, 6.995 கிலோ எடைகொண்ட தங்கத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அதன் மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து, 82 ஆயிரத்து 715 ரூபாய் என தெரிவித்துள்ளனர். #ChennaiAirport #GoldSmuggling #DRI
    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 48 மணி நேரத்துக்குள் 100 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #DRI #GoldSmuggling
    புதுடெல்லி:

    இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து தங்கம் போன்றவற்றை கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டன. மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியில் காரின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 55 கிலோ எடை கொண்ட தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தியவர்களை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்கமானது எல்லைப்பகுதியில் ஊடுருவி சட்டவிரோதமாக கடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், டெல்லி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், 34 கிலோ எடைகொண்ட தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தலில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



    மேலும், சென்னை, பெங்களூரு, மதுரை ஆகிய விமான நிலையங்களில் நடைபெற்ற சோதனையில், 13 கிலோ அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 32 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DRI #GoldSmuggling
    ஆந்திர மாநிலம் எனிகேபடு என்ற இடத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். #AndhraPradesh #CannabisCaptured
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள பகுதி எனிகேபடு. இந்த பகுதியில் அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 நபர்களை கண்ட போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடம் குறித்து அந்த இருவரும் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடத்துவதற்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 842.72 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவின் மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாய் என வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மேலும், கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்யும்பொருட்டு, போலீசார் மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #AndhraPradesh #CannabisCaptured
    இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னையில் வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
    சென்னை:

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இருந்து பல்வேறு அரிய பொருட்கள் கடல் மார்க்கமாகவும், விமான போக்குவரத்து மூலமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. அதனை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுப்பதற்கும், கடத்தப்பட்டவற்றை பறிமுதல் செய்வதிலும் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் 11.15 கிலோ எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.



    இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்திய 3 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
    ×