என் மலர்

  நீங்கள் தேடியது "Sabarimala Issue"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும் என பாரதிய ஜனதா மாநில செயலாளர் சுரேந்திரன் கூறியுள்ளார். #BJP

  திருவனந்தபுரம்:

  சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதால் கேரளாவை சேர்ந்த 2 இளம்பெண்கள் சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்த பிரச்சினை கேரளாவில் நீடித்து வருகிறது.

  இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது சபரிமலை பிரச்சினை பற்றி பிரசாரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரிகள் டிகா ராம் மீனா எச்சரித்து இருந்தார்.

  ஆனால் இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் இதுதொடர்பாக கூறியதாவது:-

  சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசு எடுத்த நிலைப்பாடு பற்றி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் 100 சதவீதம் விவாதிக்கப்படும். இதில் யாரும் தலையிட முடியாது. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும்.

  சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய உதவிய ஆளும் கம்யூனிஸ்டு அரசின் மக்கள் விரோத செயலை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா பிரசாரம் செய்யும். நாங்கள் அப்படி பிரசாரம் செய்வதை தடுக்க தேர்தல்கமி‌ஷனுக்கு அதி காரம் இல்லை.

  இவ்வாறு அவர் பேசினார். #BJP

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாமனிதன் படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. #VijaySethupathi #Maamanithan #SabarimalaIssue
  சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்தது.

  கடந்த 2-ந் தேதி முதல் பெண்கள் கேரள அரசு பாதுகாப்புடன் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் கேரளாவில் பெரிய விவாதமாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.

  இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

  அப்போது படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி கூறி இருப்பதாவது:-

  நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிக சரியான முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் பலரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் சில தாங்க முடியாத வலிகளை சந்திக்கின்றனர். நம் அனைவருக்கும் தெரியும். அந்த வலி எதனால் வருகின்றது என்று நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம்.  மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது? அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’.

  இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

  இந்த கருத்துகளுக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராடி வருபவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் சேதுபதி படங்களை புறக்கணிக்க போவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். #VijaySethupathi #Maamanithan #SabarimalaIssue 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். #SabarimalaIssue #PMModi #KeralaGovernment
  திருவனந்தபுரம்:

  பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக இன்று மாலை சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

  கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.

  சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை வரலாற்றில் மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மோசமானது. அவர்கள் இந்திய கலாசாரம், பண்பாடு, ஆன்மீகத்தை மதிக்க மாட்டார்கள் என  அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தளவு வெறுப்பு வைத்திருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.  சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிக்கிறது. காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. பார்லிமென்டில் ஒன்றை கூறுவார்கள். பத்தனம்திட்டாவில் வேறொன்றை கூறுவார்கள். அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

  இளைஞர்களின் சக்தி, ஏழைகளை புறக்கணிப்பது, மக்களை ஏமாற்றுவதில் இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் தான் என தெரிவித்தார். #SabarimalaIssue #PMModi #KeralaGovernment
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் வன்முறையில் ஈடுபடுவோரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
  சென்னை:

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கேரள முதல்வர் பினராயி விஜயனை சாதியின் பெயரால் இழிவு செய்து சனாதனவாதிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதிவெறியும் மதவெறியும் கூட்டாளிகள் தான் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அது இந்த பிரச்சனையிலும் மெய்யாகியுள்ளது.

  சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை கேரள மாநில அரசுக்கு இருக்கிறது.

  தற்போது வழிபாடு செய்துள்ள இரண்டு பெண்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளோ அல்லது கேரள அரசின் தூதுவர்களோ அல்ல. அவர்களும் பக்தர்கள் தான். அவர்கள் வழிபடச் சென்றபோது ஆண் பக்தர்கள் உறுதுணையாக இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

  ஆனால், இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.

  கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் இப்போது மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் சனாதன சக்திகள் யார் என்பதையும் அந்த சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவார் என்று நம்புகிறோம்.

  சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் கல்வீச்சிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை வெட்டுவதிலும் சனாதனவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள மாநில நிர்வாகிகள் 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #CPIM
  திருவனந்தபுரம்:

  சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

  பா.ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் காரணமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 4 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

  பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

  இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.

  விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்ததையடுத்து, கேரளாவில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #KeralaBJPBandh #SabarimalaIssue
  திருவனந்தபுரம்:

  சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று அதிகாலை வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போராட்ட பந்தலின் முன்பு ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

  வேணுகோபாலன்

  சபரிமலை விவகாரத்தில் திருவனந்தபுரம் மட்டும் அல்லாமல் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தாலும் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழக மற்றும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

  முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  #KeralaBJPBandh #SabarimalaIssue
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaiIssue #Kerala #BJP #Hardal
  திருவனந்தபுரம்:

  சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து அம்மாநில பாஜக சார்பில் கடந்த 4-ம் தேதி காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.

  போராட்டத்தை பாஜக மாநில தலைவர் சி.கே.பத்மநாபன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.  திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில்  இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

  இதற்கிடையே, இன்று அதிகாலை உண்ணாவிரம் போராட்டம் நடைபெற்ற பகுதியில் 49 வயது ஐயப்ப பக்தர் ஒருவர் சுவாமியே சரணம் ஐயப்பா  என்ற கோஷத்துடன் தனக்கு தானே தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  விசாரணையில்,  தீக்குளித்தவர் பெயர் வேணுகோபாலன் நாயர் என்பதும், முத்தடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சிகிச்சை பலனிறி அவர் மருத்துவமனையில் இறந்தார்.

  இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

  இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், வேணுகோபாலன் நாயர் மரணத்துக்கு கேரள அரசின் அலட்சியமே காரணம். அவரது சாவுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே கேரள அரசை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.  #SabarimalaiIssue #Kerala #BJP #Hardal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 8-வது நாளாக இன்றும் கேரள சட்டசபையில் பணிகள் முடங்கின. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சபாநாயகர் தலையிட்டு 3 எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.  இன்றும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், 3 எம்எல்ஏக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

  அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 8-வது நாளாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #Sabarimala #KeralaAssembly
  திருவனந்தபுரம்:

  சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  கேரள சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருவதால் சட்டசபை கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இதன் காரணமாக சபையை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இன்றும் கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் சபை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சபை நடுவே சென்று சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

  அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் சபாநாயகர் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகரால் எம்.எல்.ஏ.க்களை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

  ஆனாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன் காங்கிரசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக குற்றம் சாட்டினார். உடனே எதிர்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதலா பினராயி விஜயனுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார்.

  இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #Sabarimala #KeralaAssembly  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள சட்டசபையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

  இதனால் சபரிமலை உள்பட கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இவற்றை கட்டுப்படுத்த சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்களிடமும் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. இதற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

  இந்த நிலையில் கேரள சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சபரிமலை தொடர்பாக பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. ஒரு நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

  இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிகள் ஆரம்பமானதும் சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை விவகாரம் தொடர்பான பேனர்களையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது.  காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்களை சபாநாயகர் அமைதிபடுத்த முயன்றார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சில கருத்துக்களை கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோ‌ஷமிட்டனர்.

  அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் அதை கேட்க மறுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

  மேலும் கேள்வி நேரம் தொடங்கியதும் மீண்டும் காங்கிரசார் கோ‌ஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

  இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #KeralaAssemblySession #SabarimalaTempleIssue

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டித்து நாளை புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaIssue #BJP #Bandh
  புதுச்சேரி:

  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இதற்கு கேரளாவில் பா.ஜனதா, காங்கிரஸ், இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகள் போராட்டக்களமாக மாறி உள்ளது.  இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.

  சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

  இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரி‌ஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

  முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.

  இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.

  அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.

  முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-

  இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.

  இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற வி‌ஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

  இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.

  இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh

  • Whatsapp