என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
Byமாலை மலர்31 May 2022 3:10 PM IST (Updated: 31 May 2022 3:10 PM IST)
சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
சேலம்:
இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும் பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022 அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில் இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று தேர்வு நடத்தியது.
சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.
பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும் என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள், 2955 ஆண்கள் என 8677 பேர் தேர்வு எழுதினர்.
இதேபோல் பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர் பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013, ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.
இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து பார்க்கலாம். மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில் முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story
×