பேரன்பும் பெருநன்றியும் - சூரியின் நெகிழ்ச்சி பதிவு

கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன்.படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பேரன்பும் பெருநன்றியும் - சூரியின் நெகிழ்ச்சி பதிவு
Published on

கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தற்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவித்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com