search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vetri Maran"

    • விஜய் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு தான் நடிக்க போவதில்லை என்றும் முழு நேர அரசியல் ஈடுபடவுள்ளதாகவும் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.

    விஜய் அரசியலுக்கு வந்தது தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில், விஜய்யின் 69-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்யிடம் கதை சொல்லியிருந்த நிலையில் இருவருக்கும் இருந்த அடுத்தடுத்த பட வேலைகளால் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

    • சூரி நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை 1’ மற்றும் ‘விடுதலை 2’.
    • இப்படங்கள் நெதர்லாந்தில் திரையிடப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவான 'விடுதலை 1', 'விடுதலை 2', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்கள் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.


    இதில், 'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்து படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகர் வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் விடுதலை- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.


    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 'வாடிவாசல்' திரைப்படத்தில் அமீர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட சென்னையில் ராஜனாக அமீர் நடிக்கும் போது நான் சில விஷயங்கள் சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், வாடிவாசலில் இவர் இருந்தால் பல விஷயங்கள் எனக்கு தெரியும் என்பதற்காக நான் அவரை அணுகினேன் அமீரும் ஓகே சொல்லிவிட்டார் என்று பேசினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படத்தில் அமீர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’வட சென்னை’.
    • இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வட சென்னை'. இந்த படத்தில் தனுஷ், இயக்குனர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ் தயாரிந்திருந்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.


    வட சென்னை பகுதியில் உள்ள மக்களை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், 'வட சென்னை' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், சென்னை கமலா திரையரங்கில் வரும் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் இதுவரை இப்படத்திற்காக 4,150 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ’விடுதலை’ இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
    • இதைத்தொடர்ந்து நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.


    இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் துவக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.


    துரை செந்தில்குமார் - வெற்றிமாறன் - யுவன் சங்கர் ராஜா- சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார்.

    தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.


    இந்நிலையில், இந்தியா என்ற பெயரே போதுமானது என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "இந்தியா என்ற பெயரே எனக்கு போதுமானதாக இருக்கிறது. தேசிய விருதுகள் குறித்து எனக்கு வேறு விதமான கருத்து இருக்கிறது. நாம் ஒரு படத்தை தேர்வுக்கு அனுப்பும் போது தேர்வுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுடன் தான் அனுப்புகிறோம். அந்த தேர்வு குழு சிறந்த தேர்வு குழுவா? இல்லையா? சரியாக தேர்ந்தெடுக்கிறார்களா? என்பது அடுத்தக் கட்டம்.



    நான் ஒரு படத்தை அனுப்புகிறேன் என்றால் இந்த தேர்வுக்குழுவின் தீர்ப்பு இறுதியானது என்று ஏற்றுக் கொண்டுதான் அனுப்புகிறோம். பிறகு அந்த படத்திற்கான விருது கிடைக்கிறது இல்லை என்பது அந்த தேர்வுக்குழுவின் முடிவு. ஒரு தேர்வுக்குழுவின் முடிவு நிச்சயமாக ஒரு படத்தின் தரத்தை, அந்த படத்தின் சமூக பங்களிப்பை தீர்மானிப்பது இல்லை. 'ஜெய்பீம்' படம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடங்கினார்களோ அதை அந்த படம் செய்துவிட்டது" என்று பேசினார்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    விடுதலை

    இந்நிலையில், இப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.


    தொல். திருமாவளவன் -வெற்றிமாறன்

    மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க_விடுதலை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’.
    • இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை படக்குழு

    சமீபத்தில் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.


    விடுதலை படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சூரி தனது இணையப்பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.



    தனுஷ் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘அசுரன்’ படத்திற்காக புதிய கெட்-அப்பில் மாறி இருக்கிறார். #Dhanush #Asuran
    தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.



    தற்போது இப்படத்தின் கெட்-அப்புக்கு மாறி இருக்கிறார் தனுஷ். மேலும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். #VadaChennai
    வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை படத்தில் இடம் பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் வட சென்னை படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகத்தில் அங்கிருக்கும் மக்களின் இன்னல்கள், வாழ்வாதரங்கள் உள்ளிட்டவைகள் சொல்ல இருக்கிறோம். யாருடைய மனதையும் புன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை’ என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    வீடியோ....
    வட சென்னை’ படம் வெளியான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. #VadaChennai
    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷ் அன்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் படக்குழு அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    ‘வட சென்னை’ படம் வெளியான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் இருந்து பலரும் படத்தை ‘டவுன்லோடு’ செய்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், ‘டவுன்லோடு’ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    ‘வட சென்னை’ படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. தனுசின் 3 ஆண்டு கால உழைப்பை தமிழ் ராக்கர்ஸ் வீணடித்துள்ளது. படம் ‘ஆன்லைனில்’ கசிந்துள்ளதால், தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை குறையும். இதனால் வசூல் பாதிக்கப்படும் என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.



    புதுப்படங்களை திரைக்கு வந்த சில மணி நேரத்தில், இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது, தமிழ் ராக்கர்ஸ். படத்தை வெளியிடுபவர்கள் விஷாலுக்கு பதில் தமிழ் ராக்கர்சுக்கு கோரிக்கை விடுத்த சம்பவங்களும் நடந்துள்ளது.
    ×