என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bhavani"
- அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .
- அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்திபூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சியில் அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றி பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் பல்வேறு அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருவிழாவில் ஏழாவது நாளான இன்று மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற பொருளில் கோயம்புத்தூர் மதுரை மாவட்ட முதன்மை ஜான் ஜோசப் ஸ்டெனிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
விழாவின் 8வது நாளான நாளை மாலை மரியா -மன்னிப்பின் சிகரம் என்ற பொருளில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான்போஸ்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.
பூலோகம் போற்றும் பூண்டி மாதாவின் திருவிழா நாளான நாளை மறுநாள் 14 ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நிறைவேற்ற ப்படுகிறது.
மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
இதில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன்,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ் ,ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இரவு 9.30மணி அளவில் மல்லிகை மலர்களாலும், அதிநவீன மின் விளக்கு அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
அப்போது சிறப்பு வாணவே டிக்கை நடைபெறும் .
அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .அன்று மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறும் .
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
அலங்கார தேர்ப்பவனி காண்பதற்காக நாடெங்கிலும் இருந்த பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய நிர்வாகம் செய்து வருகிறது.
- சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது.
- பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.
பவானி:
பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) காலை சங்கமேஸ்வரர் சன்னதியில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. இதை தொடர்ந்து நாளை மாலை பஞ்சமூர்த்தி கேடயம் புறப்பாடு நடக்கிறது.
இதை தொடர்ந்து வரும் 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து அபிஷேக ஆராதனையும், அன்று இரவு சேஷ வாகனம் மற்றும் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி காலை அபிஷேக ஆராதனை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவையொட்டி வரும் 30-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும், மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி அபிஷேக ஆராதனை மற்றும் சாமி புறப்பாடும் நடக்கிறது.
இதை தொடர்ந்து வரும் 3-ந் தேதி காலை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை சங்கமேஸ்வரர் புறப்பாடும், 4-ந் தேதி காலை வேத நாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை மகா அபிஷேகமும் நடக்கிறது.
வரும் 5-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும் அன்று மாலை பரி வேட்டை சாமி புறப்பாடு, 6-ந் தேதி காலை தீர்த்தவாரியும், அன்று மாலை பிஷாண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதைதொடர்ந்து வரும் 7-ந் தேதி காலை நடராஜர் அபிஷேக ஆராதனை புறப்பாடும், அன்று மாலை மஞ்சள் நீர் விழாவும், சாமி புறப்பாடும், அவரோஹணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
- குருத்தோலை பவனி நடைபெற்றது.
ஆத்தூர்:
கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் 40 நாட்கள் சாம்பல் புதனில் தொடங்கி வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையோடு முடிவடைகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.
அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
- எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.
- செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
பவானி:
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.
தொடர்ந்து இன்று காலை மூலவர் மற்றும் உற்சவர் செல்லியாண்டி அம்மனுக்கு சிவா சிவாச்சாரியார் குழுவினர் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் ஓம் சக்தி, ஓம் சக்தி என கோஷங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. நகரில் முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலை அடைந்தது.
- வேளாங்கண்ணி மாதா ரத பவனி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது .
- விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மறை மாநில அருட்தந்தை பன்னீர்செல்வம் சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட மின்னொளி ரதத்தில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஏற்றப்பட்டு பங்கு மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. லாரன்ஸ் போஸ் ஆசீர்வாதத்துடன் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று சப்பரபவனி தொடங்கியது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரத பவனியில் அருட்சகோதரிகள் வழிபாடு பாடல்களை பாடி வந்தனர். 43-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் நெற்குப்பை, சிங்கம்புணரி, மாதா நகர், காரையூர் இலங்கை முகாம் மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.
ஈரோடு:
மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற கரையோரப் பகுதியில் வசித்த 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. பவானி ஆறு, காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பவானி கூடுத்துறையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதேப்போல் கொடுமுடியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இதேப்போல் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் உபரி நீர் திறப்பு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.
இன்று மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதேபோல் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.
இதனால் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
வீடுகளில் சூழ்ந்த வெல்லம் வடியத் தொடங்கிவிட்டது. எனினும் வீடுகளில் சேரும் சகுதியுமாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது முகாமில் ஒரு சில மக்களே தங்கியுள்ளனர். அவர்களும் நாளைக்குள் வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருவாதவூரில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் பவனி நடந்தது.
- இன்று அவர் சித்தி பெற்ற நாளாகும்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பொன்மொழிக்கேற்ப திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். இன்று அவர் சித்தி பெற்ற நாளாகும்.
இதனை முன்னிட்டு திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ேகாவிலில் இருந்து மாணிக்கவாசகர் சப்பரத்தில் புறப்பட்டு அருகில் உள்ள பிறந்த வீட்டிற்கு சென்று பக்தர்களுக்கு இன்று காலை அருள் பாலித்தார்.
பல்வேறு மாவட்ட ங்களில் வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சிவனடியார்கள் அவரது வீட்டுக்கு வந்து இருந்து திருவாசகம் படித்தனர். கோவிலின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா விற்கான ஏற்பாடுகளை மாணிக்கவாசகர் கோவில் அறங்காவலர்கள் மனோஜ் பிரபாகர், சீனிவாசன், சுசீந்திரன், முருகன், சேது மாதவன், கார்த்திகேயன் ஆகியோர் செய்து இருந்தனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 906 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு 800 கன அடியும், குடிநீர் தேவைக்காக 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 905 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
- இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பவானி:
ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.
இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,667 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் திறப்பதாலும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,667 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது .