என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆத்தூர், புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தபோது எடுத்த படம்.
ஆத்தூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
- ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
- குருத்தோலை பவனி நடைபெற்றது.
ஆத்தூர்:
கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் 40 நாட்கள் சாம்பல் புதனில் தொடங்கி வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையோடு முடிவடைகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.
அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.