search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurutholai"

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.
    • பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் முன்னிலை வகித்தனர். வி.வி.ஆர்.நகரில் இருந்து பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர். பின்பு மாதா கோவிலில் ஜெபம் செய்யப்பட்டது. இதில் மாதா கோவில் தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோக ராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், நிர்வாகி அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
    • குருத்தோலை பவனி நடைபெற்றது.

    ஆத்தூர்:

    கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் 40 நாட்கள் சாம்பல் புதனில் தொடங்கி வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையோடு முடிவடைகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    • இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
    • ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    கடலூர்:

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரு க்குள் கழுதை மேல் அமர்ந்துவரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பா டல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோ லை பவனி நடைபெறும். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று காலை கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் குருத் தோலைகளை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாயலத்தை வந்தடைந்தனர். இதில் ஏ ராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் ஆற்காடுலுத்தரன் திருச்சபை மற்றும் கடலூர் செம்மண்டலம், திருதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்ப ட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்த வர்கள் ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    ×