சாயல்குடியில் குருத்தோலை பவனி

சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர்.
சாயல்குடியில் குருத்தோலை பவனி
Published on

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் முன்னிலை வகித்தனர். வி.வி.ஆர்.நகரில் இருந்து பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர். பின்பு மாதா கோவிலில் ஜெபம் செய்யப்பட்டது. இதில் மாதா கோவில் தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோக ராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், நிர்வாகி அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com