என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாகன பவனி நடைபெற்ற காட்சி.
  X
  வாகன பவனி நடைபெற்ற காட்சி.

  பழைய பேட்டை அய்யா வைகுண்டர் அதிசய பதியில் வாகன பவனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழைய பேட்டை அய்யா வைகுண்டர் அதிசய பதியில் வாகன பவனி நடைபெற்றது. இதில் திரளான அன்புகொடி மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
  நெல்லை:

  நெல்லை பழைய பேட்டை அய்யா வைகுண்டர் அதிசய பதியில் 17 -ம் ஆண்டு திருவிழா மற்றும் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு கடந்த 13ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி விழாவின் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் ஒவ்வொரு வாகனத்தில் சப்பர பவனி வந்தார்.

  10-ம் நாள் திருவிழாவான நேற்று காலையில் பணிவிடைகள், உகப்படிப்பு, அதன்பின்னர் விநாயகர் கோவிலில் இருந்து சந்தன குடம் எடுத்து வருதல், மதியம் உச்சி படிப்பு, அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

  11-ம் நாள் திருவிழாவான இன்று அய்யா வைகுண்டர் இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. நாளை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கொடி இறக்கும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழையபேட்டை அய்யா வைகுண்டர் அதிசய பதி நிர்வாகிகள் மற்றும் அன்புக்கொடி மக்கள் செய்துள்ளனர்.
  Next Story
  ×